பவுலிங்க்ல இந்தியா தப்பு பண்ணிட்டாங்க, இனி இந்தியாவால ஜெயிக்கவே முடியாது - இயான் சேப்பல்!

Published : Mar 10, 2023, 05:12 PM IST
பவுலிங்க்ல இந்தியா தப்பு பண்ணிட்டாங்க, இனி இந்தியாவால ஜெயிக்கவே முடியாது - இயான் சேப்பல்!

சுருக்கம்

முதல் நாளிலேயே இந்திய பவுலர்கள் அந்த தப்பை செய்ததால் இனி இந்தப் போட்டியில் இந்தியா ஜெயிப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இதில், உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 2ஆவது நாள் ஆட்டத்தையும் தொடர்ந்தனர்.

கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்: டேய் சும்மா இருடா என்று திட்டிய விராட் கோலி!

முதல் ஓவர்லேயே ஒரு ரன் எடுத்த க்ரீன் தனது அரைசத்த்தை அடித்தார். இதைத் தொடர்ந்து விக்கெட் விழாவில் நிதானமாக நின்று இருவரும் ரன்கள் சேர்த்தனர், ஒருபுறம் 150 ரன்களைக் கவாஜா கடக்க, மறுபுறம் க்ரீன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். 5ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது. அக்‌ஷர் படேல், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின் என்று ஒருவர் மாற்றி ஒருவர் பந்து வீசினாலும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

இந்த நிலையில், அஸ்வின் தான் கடைசியாக இந்த ஜோடியை பிரித்தார். ஆம், 114 ரன்கள் சேர்த்திர்ந்த க்ரீன் அஸ்வின் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கவாஜாவும் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அவர் 180 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரையில் நடந்த 3 போட்டிகளுமே 3 நாட்களில் முடிந்த நிலையில், இந்தப் போட்டி 2ஆவது நாள் முடியும் நிலையில் கூட ஒரு இன்னிங்ஸ் கூட முடியவில்லை. தற்போது வரையில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 439 ரன்கள் எடுத்துள்ளது.

ரோகித் சர்மா சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்த உஸ்மான் கவாஜா!

இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல் கூறியிருப்பதாவது: இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜாவுக்கு இந்திய பவுலர்கள், அரௌண்ட் தி விக்கெட் திடையில் பந்து வீசி தவறு செய்துவிட்டார்கள். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான ஓவர் தி விக்கெட் திசையில் பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால், இதனை இந்திய வீரர்கள் சரியாக செய்ய தவறிவிட்டதால், முதல் நாளிலேயே பின்னடைவை சந்தித்தார்கள். ஆதலால், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்று தான். 

முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!

இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்தியா எல்லா நேரங்களிலும் அரௌண்ட் தி விக்கெட் பந்து வீசுகிறார்கள். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஓவர் தி விக்கெட் திசையில் பந்து வீசும் வலது கை பவுலர்களை எதிர்கொள்வது கடினம். இந்தியாவின் இந்த பிளான் இங்கிலாந்து மண்ணில் அங்குள்ள கால நிலைக்கு வேண்டுமென்றால் வேலை செய்யலாம். ஆனால், இந்திய மண்ணில் இந்தியாவில் உஸ்மான் கவாஜா போன்ற ஆன் சைட் திசையில் வலுவான வீரர்களுக்கு அது மோசமானது தான். கவாஜாவின் பேட்டிங் திறமையை முறியடிக்கும் வகையில் இந்திய வீரர்கள் பந்து வீசவில்லை. இதனால், இந்திய வீரர்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!