ENG vs SL: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த அதிசயம்: கேப்டனின் தைரியத்திற்கு குவியும் பாராட்டு!

Published : Aug 23, 2024, 03:20 PM IST
ENG vs SL: 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த அதிசயம்: கேப்டனின் தைரியத்திற்கு குவியும் பாராட்டு!

சுருக்கம்

இங்கிலாந்து vs இலங்கை: இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை வீரர்களான தனஞ்சய டி சில்வா, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் இணைந்து ஆசியாவுக்கு வெளியே எந்த சுழற்பந்து வீச்சு ஜோடியும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளனர்.   

England vs Sri Lanka: இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது. தற்போது 23 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் வரலாறு படைத்துள்ளனர். 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவுக்கு வெளியே இதுவரை நடக்காதது இப்போது நடந்துள்ளது.

IPL 2025: போதும் போதும் நீங்கள் விளையாடியது – சிஎஸ்கேயில் மோசமான ஃபார்மால் வெளியேற்றப்படும் டாப் 5 பிளேயர்ஸ்!

தனஞ்சய டி சில்வா-பிரபாத் ஜெயசூர்யா ஜோடி ஆசியாவுக்கு வெளியே எந்த சுழற்பந்து வீச்சு ஜோடியும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளனர். வழக்கமாக இங்கிலாந்து மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் இலங்கை அணி கேப்டன் தனஞ்சய டி சில்வா ஆச்சரியமளிக்கும் வகையில் முடிவெடுத்தார். கேப்டன் சுழற்பந்து வீச்சாளர்களுடன் பந்து வீச்சைத் தொடங்கினார். இதைப் பார்த்து இங்கிலாந்து அணியும் ஆச்சரியப்பட்டது. இந்த போட்டிக்கு மழை வில்லனாக இருந்தது. பலமுறை இடையூறு செய்தது. மேகங்கள் குறைவது, வெளிச்சம் குறைவது போன்ற காரணங்களால் நடுவர்கள் விரைவாகவே போட்டியை முடிக்க நினைத்தனர்.

தோனியின் பண்ணை வீட்டில் சொகுசாக எஞ்ஜாய் பண்ணிய ஹர்திக் மற்றும் குர்ணல் பாண்டியா!

ஆனால் இலங்கை அணி கேப்டன் தனஞ்சய எந்த பிரச்சனையும் இல்லை, போட்டியைத் தொடரலாம் என்று கூறினார். இருள் சூழ்ந்ததால் வெளிச்சம் குறைந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களுடன் இலங்கை அணி பந்துவீச்சைத் தொடங்கியது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் முதல் மற்றும் இரண்டாவது ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். கேப்டன் தனஞ்சய தானே முதல் ஓவரை வீசினார். இது இங்கிலாந்து மண்ணில் அதிர்ச்சியளிக்கும் முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு நிற்கவில்லை. இரண்டாவது ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யாவிடம் வீசச் சொன்னார். மான்செஸ்டரில் ஒரு இன்னிங்ஸின் தொடக்கத்தில் இரண்டு ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியது அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு. ஆசியாவுக்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு ஓவர்களை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வீசுவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

விராட் கோலி மீது பைத்தியமா இருக்கும் கிரிக்கெட் அழகி க்ஸாரா ஜெட்லி – அவருடன் அதை பண்ண ஆசைப்படும் க்ஸாரா!

ஏழாவது ஓவரில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டை அவுட் செய்து பிரபாத் ஜெயசூர்யா இலங்கை அணிக்கு முதல் விக்கெட்டைப் பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து அசிதா பெர்னாண்டோ, ஆலி போப்பை அவுட் செய்தார். 18 ரன்களில் பென் டக்கெட், 6 ரன்களில் கேப்டன் ஆலி போப் ஆகியோருடன் 30 ரன்களில் டான் லாரன்ஸ் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் 73 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 65 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜாமி ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவரது இன்னிங்ஸில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். ஸ்மித்துடன் இணைந்து காஸ் அட்கின்சன் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?