திருமணத்திற்கு முன்பு தந்தையான கிரிக்கெட் வீரர்கள்: காதலில் விழுந்து திருமணத்திற்கு முன்பே தந்தையான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் 6 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் விவரங்கள் இதோ.
கிரிக்கெட்டிற்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டைத் தான் அதிகமானோர் பின்பற்றுகிறார்கள். கிரிக்கெட்டில் சர்ச்சை, சுவாரஸ்யம் என்பதையெல்லாம் தாண்டி காதலும் உண்டு. ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உச்சத்தில் இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இன்னும் சில கிரிக்கெட் வீரர்கள் தந்தையான பிறகு தான திருமணமே செய்து கொள்கிறார்கள். அப்படி திருமணத்திற்கு முன்னரே தந்தையான கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
1. ஹர்திக் பாண்டியா
திருமணத்திற்கு முன்பே தந்தையான இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. இவர், செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை 2020 ஜனவரி 1 ஆம் தேதி துபாயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஜூலை 30, 2020 அன்று, ஹர்திக் பாண்டியா, நடாஷா கர்ப்பமாக இருப்பதாகவும், தான் தந்தையாகப் போவதாகவும் அறிவித்தார். ஹர்திக் பாண்டியா தனது குழந்தைக்கு 'அகஸ்தியா' என்று பெயரிட்டார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்திக் பாண்டியா-நடாஷா ஸ்டான்கோவிச் சமீபத்தில் விவாகரத்து செய்து பிரிந்து சென்றனர். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் சமரசமாக பிரிந்து சென்றனர்.
2. ஜோ ரூட்
திருமணம் செய்து கொள்ளாமலேயே தந்தையான மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜோ ரூட். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நட்சத்திர வீரர் தனது காதலி கேரி கோர்டெலுடன் 2014 முதல் டேட்டிங் செய்து வந்தார். மார்ச் 2016ல் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஜோ ரூட் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தந்தையானார். ஜோ ரூட்டின் மகன் ஆல்ஃபிரட் 7 ஜனவரி 2017 அன்று பிறந்தார். அதன் பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.
3. டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே தந்தையானார். 2014 ஆம் ஆண்டில், டேவிட் வார்னரின் காதலி கேண்டிஸ் தனது முதல் மகளைப் பெற்றெடுத்தார். டேவிட் வார்னர் 2015 இல் கேண்டிஸை மணந்தார். வார்னருக்கு ஐவி, இண்டி, இஸ்லா என மூன்று மகள்கள் உள்ளனர்.
4. டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோவும் திருமணத்திற்கு முன்பே தந்தையானார். பிராவோ தனது இரண்டு தோழிகள் கைதா கோன்சால்வ்ஸ், ரெஜினா ராம்ஜித் ஆகியோருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
5. கிறிஸ் கெயில்
திருமணமாகாமலேயே தந்தையான கிரிக்கெட் வீரர்களில் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்லும் ஒருவர். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது, கெயிலின் காதலி நடாஷா பெர்ரிட்ஜ் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
6. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸும் திருமணத்திற்கு முன்பே தந்தையானார். சைமண்ட்ஸ்-அவரது மனைவி லாரா 2014 இல் திருமணம் செய்து கொண்டனர். மகன் பிறந்த ஒரு வருடம் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவரது மனைவி லாராவுடன், அவருக்கு குளோ, பில்லி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.