SL vs AUS: முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய வீரர் கம்பேக்

Published : Jun 07, 2022, 02:16 PM IST
SL vs AUS: முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய வீரர் கம்பேக்

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலிய அணி நீண்ட சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளது. இலங்கை  -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டி20 போட்டி இன்று (ஜூன்7) நடக்கிறது. அனைத்து அணிகளுமே, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருவதால், ஒவ்வொரு டி20 தொடரும் ஒவ்வொரு அணிக்கும் மிக முக்கியம். அந்தவகையில், இந்த தொடரில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் தான் களமிறங்குகின்றன.

இன்று கொழும்பில் நடக்கும் முதல் டி20 போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலங்கை அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் நிசாங்கா மற்றும் தனுஷ்கா குணதிலகா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குகின்றனர். 3ம் வரிசையில் சாரித் அசலங்கா இறங்குகிறார். ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடி மீண்டும் இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள ராஜபக்சா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக எடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்பின்னர்களாக வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய இருவரும் ஆடுகின்றனர். ஃபாஸ்ட்பவுலர்களாக துஷ்மந்தா சமீரா, சாமிகா கருணரத்னே, நுவான் துசாரா ஆகியோர் ஆடுகின்றனர்.

முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் ஆடும் லெவன்:

பதும் நிசாங்கா, தனுஷ்கா குணதிலகா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, நுவான் துசாரா.

முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஜோஷ் ஹேசில்வுட்.

PREV
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!