பெரிய பிளேயர்ஸ்னா அதுமாதிரி ஆடணும்;வெறும்பெயரை மட்டும் வச்சுலாம் ஓட்டமுடியாது!ரோஹித்,கோலியை விளாசிய கபில்தேவ்

By karthikeyan VFirst Published Jun 6, 2022, 9:58 PM IST
Highlights

பெரிய வீரர்கள் என்றால், அதற்கேற்றாற்போல் ஆடவேண்டுமே தவிர, வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ஓட்டமுடியாது என்று ரோஹித், கோலி, கேஎல் ராகுல் ஆகிய வீரர்களை கபில் தேவ் விளாசியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் ஃபார்மில் இல்லாமல் திணறிவருகின்றனர். ஐபிஎல்லில் இந்த 2 சீனியர் வீரர்களும் படுமோசமாக ஆடினர். அவர்களது மோசமான பேட்டிங் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ரோஹித், கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் குறித்து பேசிய கபில் தேவ், ரோஹித், கோலி, ராகுல் ஆகிய வீரர்கள் 150-160 ஸ்டிரைக் ரேட்டில் ஆடக்கூடிய வீரர்கள். இவர்கள் பெரிய வீரர்கள் தான். ஆனால் அடித்து ஆடி பெரிய ஸ்கோர் செய்ய வேண்டிய நேரத்தில் அவுட்டாகிவிடுகிறார்கள். முதல் 8-10-12 பந்துகள் நிதானமாக ஆடி செட்டில் ஆகவேண்டும் என்று சொல்வோம். ஆனால் 25 பந்தில் அவுட்டானால் அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நிலைத்து நின்று 20 ஓவர்கள் வரை ஆடவேண்டுமா அல்லது அடித்து ஆடவேண்டுமா என்பதை தீர்மானித்துவிட்டு அதன்படி ஆடவேண்டும். 

ராகுல்20 ஓவர்கள் பேட்டிங் ஆடி 80-90 ரன்களடித்தால் அணிக்கு அது போதுமானது. ஆனால் 20 ஓவர்கள் ஆடி 60 நாட் அவுட்ட்டில் சென்றால் அது அணிக்கு எந்தவித பயனும் அளிக்காது. நற்பெயர் மற்றும் புகழ் ஆகியவை பெரிதுதான். ஆனால் அவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. அதற்கேற்றவாறு ஆடவேண்டும். அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேட்டிங் ஆடவேண்டும். வெறும் பெயரால் மட்டுமே பெரிய வீரர்கள் ஆகிவிடமுடியாது. சிறப்பான ஆட்டத்தின் மூலம் அதை நிரூபிக்க வேண்டும் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 

click me!