சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரெக்கார்டை ஜோ ரூட் முறியடிப்பார்..! ஆஸி., முன்னாள் கேப்டன் அதிரடி

Published : Jun 06, 2022, 05:43 PM IST
சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரெக்கார்டை ஜோ ரூட் முறியடிப்பார்..! ஆஸி., முன்னாள் கேப்டன் அதிரடி

சுருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கருத்து கூறியிருக்கிறார்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் இங்கிலாந்தின் ஜோ ரூட். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக ஆடி 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த ஜோ ரூட், அண்மையில் கேப்டன்சியிலிருந்து விலகினார். கேப்டன்சியிலிருந்து விலகியபின், ஒரு வீரராக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 277 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியபோது 69 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஜோ ரூட் தான் பொறுப்புடன் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்த போட்டியில் ரூட் அடித்தது அவரது 26வது டெஸ்ட் சதம். மேலும் டெஸ்ட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10015 ரன்களை குவித்துள்ளார் ரூட்.

இந்நிலையில், ரூட் சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள்(15921 ரன்கள்) சாதனையை முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கருத்து கூறியுள்ளார்.

31 வயதான ரூட், குறைந்தது இன்னும் 5 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவார். எனவே 15000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதுடன், சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது என்று மார்க் டெய்லர் கூறியிருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!