Asia Cup: வாழ்வா சாவா போட்டியில் மோதும் வங்கதேசம் - இலங்கை அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Sep 1, 2022, 11:55 AM IST
Highlights

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க - Asia Cup: செம பேட்டிங் சூர்யா.. சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்கிய விராட் கோலி..! வைரல் வீடியோ

ஆசிய கோப்பை லீக் சுற்றில் ஏ பிரிவில் பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி எஞ்சியிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும் என்பது தெரிந்ததே.

ஆனால் பி பிரிவில் வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இந்த 2 அணிகளுமே ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

வங்கதேசம் - இலங்கை இடையேயான போட்டி துபாயில் இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்குகிறது. வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கும் வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளின் உத்தேச ஆடும் லெவனை  பார்ப்போம்.

உத்தேச வங்கதேச அணி:

முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மொசாடெக் ஹுசைன், மஹ்மதுல்லா, மஹெடி ஹசன், முகமது சைஃபுதின், டஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

இதையும் படிங்க - கோலி, ஒரு தலைமுறைக்கே முன்னோடி நீங்கள்..! விராட் கோலிக்கு நினைவுப்பரிசு வழங்கி நெகழவைத்த ஹாங்காங் அணி

உத்தேச இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரனா.
 

click me!