SL vs AUS 3வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jun 18, 2022, 09:03 PM ISTUpdated : Jun 18, 2022, 09:08 PM IST
SL vs AUS 3வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது.

3வது ஒருநாள் போட்டி நாளை(ஜூன்19) நடக்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, குசால் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, ஜெஃப்ரி வாண்டர்சே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்மித் காயமடைந்ததால் அவர் இந்த போட்டியில் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக கேமரூன் க்ரீன் - ஜோஷ் இங்லிஸ் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன்/ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.  
 

PREV
click me!

Recommended Stories

ஆர்சிபி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. பெங்களூரு சின்னசாமியில் ரன் மழைக்கு ரெடியா? குட் நியூஸ்!
விராட் கோலி vs ரோஹித் சர்மா: இந்தூர் ஒருநாள் போட்டியின் கிங் யார்?