Sri Lanka vs Afghanistan: இலங்கை – ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை: சூப்பர் 4 சுற்று யாருக்கு?

By Rsiva kumar  |  First Published Sep 5, 2023, 10:50 AM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2ஆவது போட்டியில் இலங்கையும் மோதின. 3ஆவது போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. 4ஆவது போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.

IND vs NEP: தார்பாய் கொண்டு வந்து திரும்ப கொண்டு சென்ற ஊழியர்கள்; நடுவரது செயலால் குஷியான ஹர்திக் பாண்டியா!

Tap to resize

Latest Videos

நேற்று நடந்த இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ரத்து செய்யப்பட இருந்தது. கடைசியாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி 20.1 ஓவர்களில் விக்கெட் விழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றது. ஆனால், நேபாள் அணியானது தொடரிலிருந்து வெளியேறியது.

Gautam Gambhir: நடுவிரலை காட்டியது ஏன்? கௌதம் காம்பீர் விளக்கம்!

இந்த நிலையில், இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியானது சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். லாகூர் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் நடந்த 2ஆவது லீக் போட்டியில் இலங்கை, வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதையடுத்து, நடந்த 4ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியானது, 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஆனால், ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் சமநிலையில் இருக்கும். இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

India vs Nepal: ஆசிய கோப்பை வரலாற்றில் விராட் கோலி, குமார் சங்கக்காரா சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

ரன் ரேட் அடிப்படையில் பார்த்தால் இலங்கை +0.951 ரன் ரேட் பெற்றிருக்கிறது. வங்கதேச அணி +0.373 என்ற ரன் ரேட்டும், ஆப்கானிஸ்தான் ஆனது -1.780 என்ற ரன் ரேட்டும் பெற்றுள்ளன. ஆதலால், ஆப்கானிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒரு வேளை சேஸிங் செய்கிறது என்றால், குறைந்த ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.

லாகூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால், இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். இரு அணிகளும் ஒரு நாள் போட்டிகளில் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 6 முறை இலங்கையும், 3 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வான வேடிக்கை காட்டிய ரோகித் சர்மா, சுப்மன் கில்: இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்!

click me!