#ENGvsSL முதல் ஒருநாள் போட்டி: குசால் பெரேரா, ஹசரங்கா அரைசதம்..! படுமட்டமா சுருண்ட இலங்கை அணி

Published : Jun 29, 2021, 07:21 PM IST
#ENGvsSL முதல் ஒருநாள் போட்டி: குசால் பெரேரா, ஹசரங்கா அரைசதம்..! படுமட்டமா சுருண்ட இலங்கை அணி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 185 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி.  

இங்கிலாந்து - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான குசால் பெரேரா ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் பெரேரா மற்றும் மிடில் ஆர்டர் வீரர் ஹசரங்கா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். குசால் பெரேரா 73 ரன்களும் ஹசரங்கா 53 ரன்களும் அடிக்க, இவர்கள் இருவரைத்தவிர சமீரா கருணரத்னே மட்டுமே 19 ரன்கள் என்ற இரட்டை இலக்க ரன்னை அடித்தார்.

மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 43வது ஓவரில் வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.

186 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி எளிதாக அடித்துவிடும். 
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த KKR.. ஆலன், ரகுவன்ஷி தெறி பேட்டிங்.. GT-க்கு 247 ரன்கள் இலக்கு
Sanju Samson: ஆரஞ்சு கேப் ரேஸில் சஞ்சு சாம்சன் அதிரடி என்ட்ரி! மிரளும் எதிரணிகள்!