RCB vs SRH: தொடர்ச்சியாக 7வது போட்டியில் டாஸ் ஜெயித்த கேன் வில்லியம்சன்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Apr 23, 2022, 07:19 PM IST
RCB vs SRH: தொடர்ச்சியாக 7வது போட்டியில் டாஸ் ஜெயித்த கேன் வில்லியம்சன்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளுமே இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன. இதுவரை ஆர்சிபி ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளையும், சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் இது சன்ரைசர்ஸ் அணிக்கு 7வது போட்டி. இதற்கு முந்தைய 6 போட்டிகளிலும் டாஸ் ஜெயித்த சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன், தொடர்ச்சியாக 7வது போட்டியிலும் டாஸ் ஜெயித்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.

ஆர்சிபி அணி:

அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!