உலகக் கோப்பை வின்னிங் கேப்டனா? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்ஷியில் மாற்றமா?

By Rsiva kumarFirst Published Feb 13, 2024, 9:53 AM IST
Highlights

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்ஷியில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது, வெற்றி பெற்று 2ஆவது முறையாக சாம்பியனானது. இரண்டு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எய்டன் மார்க்ரம் தான் கேப்டனாக இருந்துள்ளார். இவரது தலைமையின் கீழ் தான் ஈஸ்டர்ன் கேப் அணியானது 2 முறையும் சாம்பியனாகியுள்ளது.

யாருமே அப்பீல் செய்யவில்லை – ரன் அவுட்டை இல்லை என்று அறிவித்த நடுவர்; கிரிக்கெட்டில் நடந்த வேடிக்கை!

Latest Videos

தொடர்ந்து 2 முறையும் சன்ரைசர்ஸ் அணியானது சாம்பியனானது, அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் டிராபியை கைப்பற்ற வேண்டும் என்று காவ்யா மாறன் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்காகவே கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா கேப்டனான பேட் கம்மின்ஸ ரூ.20.50 கோடி கொடுத்து அணியில் வாங்கினார்.

India vs England 3rd Test: தீவிர பேட்டிங் பயிற்சியில் இறங்கிய கேஎல் ராகுல் – வைரலாகும் வீடியோ!

அப்போதே சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன்ஷியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2ஆவது முறையாக சாம்பியன் டிராபியை வென்றிருக்கிறது.

ஆனால், ஐபிஎல் என்று வந்துவிட்டால் சன்ரைசர்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்திய மண்ணில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக மாற்றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் பலி!

இது குறித்து காவ்யா மாறன், பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!