
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்று புனேவில் நடக்கிறது. இன்றிரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த சீசனில் இந்த 2 அணிகளுக்குமே இதுதான் முதல் போட்டி.
முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயாஸ் கோபால், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், நேதன் குல்ட்டர்நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.