7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..? ஸ்ரீசாந்த் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 2, 2020, 5:34 PM IST
Highlights

ஸ்ரீசாந்த் எந்த ஐபிஎல் அணியில் ஆட ஆசை என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். 
 

ஸ்ரீசாந்த் எந்த ஐபிஎல் அணியில் ஆட ஆசை என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்திய அணியின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் 2006ம் ஆண்டு டெஸ்ட் அணியிலும் அறிமுகமானார். இந்திய அணி 2007ல் டி20 உலக கோப்பையையும் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையையும் வென்றபோது, அந்த அணிகளில் முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீசாந்த். 

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதன்பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் உள்ளார் ஸ்ரீசாந்த். 

ரஞ்சியில் கேரள அணிக்காக ஆடவுள்ளார். இந்திய அணிக்கும் ஐபிஎல்லிலும் மீண்டும் ஆடும் எதிர்பார்ப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த். தன் மீதான தடை முடிந்ததையடுத்து, மீண்டும் கிரிக்கெட் களம் காணவுள்ளதால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், நிறைய பேட்டிகள் கொடுத்துவருகிறார். 

இந்நிலையில், கிரிக்கெட் தொடர்பான ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், மீண்டும் ஐபிஎல்லில் ஆடினால் எந்த அணிக்கு ஆட விரும்ப்பம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், எந்த அணி என்னை எடுத்தாலும், அந்த அணிக்காக கண்டிப்பாக சிறப்பாக ஆடுவேன். ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக, எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட ஆசை. சச்சின் டெண்டுல்கருடன் இருப்பதான் மூலம் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளமுடியும். எனவே சச்சின் டெண்டுல்கருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட விரும்புகிறேன். தோனிக்கு கீழ் சிஎஸ்கே அல்லது ஆர்சிபி அணிகளிலும் ஆட விருப்பம் என்று தெரிவித்தார். 

ஸ்ரீசாந்த் 2008லிருந்து 2013 வரை ஐபிஎல்லில் ஆடினார். 2008-2010 காலக்கட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் 2011ல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியிலும் 2012-2013ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஸ்ரீசாந்த் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!