கேப்டன் ரோஹித் சர்மா.. ஃபாஸ்ட் பவுலர் தேர்வு செய்த இந்தியா டி20 லெவன்

By karthikeyan VFirst Published Jul 9, 2020, 5:42 PM IST
Highlights

தன்னையும் உள்ளடக்கிய இந்தியா டி20 லெவனை ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார். 
 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், 2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். அதன்பின்னர் அவர் மீதான வாழ்நாள் தடை ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் கிரிக்கெட் ஆடும் ஆர்வத்திலும் உற்சாகத்திலும் உள்ளார் ஸ்ரீசாந்த். 

ரஞ்சியில் கேரள அணிக்காக ஆடவுள்ளார். இந்திய அணிக்கும் ஐபிஎல்லிலும் மீண்டும் ஆடும் எதிர்பார்ப்பில் உள்ளார் ஸ்ரீசாந்த். தன் மீதான தடை முடிந்ததையடுத்து, மீண்டும் கிரிக்கெட் களம் காணவுள்ளதால் உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், நிறைய பேட்டிகள் கொடுத்துவருகிறார். 

அந்தவகையில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஸ்ரீசாந்த்திடம் அவரையும் உள்ளடக்கிய டி20 இந்திய அணியை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டது. ஸ்ரீசாந்த் தேர்வு செய்த அந்த அணியை பார்ப்போம்.

ஸ்ரீசாந்த் தேர்வு செய்த இந்தியா டி20 லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரீசாந்த்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் எந்த விதமான போட்டிகளிலும் ரெய்னா ஆடவில்லை. ஆனால் ரெய்னா எல்லா ஃபார்மட்டுக்குமான சிறந்த வீரர் என்றும் அவரால் இன்னும் சிறப்பாக ஆடமுடியும் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக கூறிய ஸ்ரீசாந்த், டி20 அணியின் கேப்டனாக ரோஹித் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். டி20 கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் கொடுத்துவிட்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பை மட்டும் கோலி வகிக்கலாம் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 
 

click me!