க்ளீன் போல்டு.. இங்கிலாந்து வீரரின் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்த கேப்ரியல்..! செம பவுலிங் வீடியோ

By karthikeyan VFirst Published Jul 9, 2020, 5:00 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர் கேப்ரியல் அருமையாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்திவருகிறார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு நேற்று தான் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில், முதல் நாளான நேற்று 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. மழையால், முதல் நாள் பெரும்பாலான ஆட்டம் தடைபட்டது. 

முதல் நாள் ஆட்ட முடிவில் 17.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் அடித்திருந்தது. இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே கேப்ரியலின் பந்தில் டோமினிக் சிப்ளி டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்த அவர்கள் இருவரும் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 

இரண்டாவது விக்கெட்டுக்கு 48 ரன்களை இருவரும் சேர்த்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில், அதை அனுமதிக்காத கேப்ரியல், ஜோ டென்லியை அருமையான இன்ஸ்விங்கின் மூலம் கிளீன் போல்டாக்கினார். கேப்ரியலின் பவுலிங்கில் ஆஃப் ஸ்டம்ப் பிடுங்கி எறியப்பட்டது. ஜோ டென்லி 18 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து, பர்ன்ஸும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையும் கேப்ரியல் தான் வீழ்த்தினார். 

 

That sweet sound 🎯pic.twitter.com/MCSfdXoLkt

— ESPNcricinfo (@ESPNcricinfo)

இதையடுத்து ஜாக் க்ராவ்லியுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இவர்களையும் பார்ட்னர்ஷிப் அமைக்கவிடாமல், க்ராவ்லியை 10 ரன்களில் வீழ்த்தினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர். இங்கிலாந்து அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஸ்டோக்ஸுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

click me!