India vs South Africa: டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க டாப் பவுலர்..! இந்திய அணிக்கு அனுகூலம்

By karthikeyan VFirst Published Dec 21, 2021, 7:25 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்காவின் முக்கியமான பவுலரான அன்ரிக் நோர்க்யா காயம் காரணமாக விலகியுள்ளார்.
 

3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது இந்திய அணி. வரும் 26ம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்
2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்
3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும். 

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே காயத்தால் விலகும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயத்தால் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இப்போது தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான அன்ரிக் நோர்க்யா காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான அன்ரிக் நோர்க்யா அந்த அணியின் முக்கியமான பவுலர். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அசால்ட்டாக 140 கிமீ வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக வீசவல்ல நோர்க்யா, கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்திருப்பார். இந்நிலையில், அவர் விலகியிருப்பது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவு. அதேவேளையில், இந்திய அணிக்கோ இது அனுகூலமான (சாதகம்) விஷயம்.

இந்திய டெஸ்ட் அணி:

விராட் கோலி (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), மயன்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரியன்க் பன்சால்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

டீன் எல்கர், டெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, எய்டன் மார்க்ரம், வியான் மல்டர், கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், மார்கோ ஜான்சன், க்ளெண்டன் ஸ்டர்மான், பிரெனெலன் சுப்ராயென், சிசாண்டா மகளா, ரியான் ரிக்கெல்டான், டுவான் ஆலிவியர்.
 

click me!