கோமாவில் இருந்து மீண்டார் தென்னாப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர்..!

Published : Jun 04, 2022, 05:48 PM IST
கோமாவில் இருந்து மீண்டார் தென்னாப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர்..!

சுருக்கம்

பிரிட்ஜ்வாட்டர் நகரில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி, கோமாவில் இருந்த தென்னாப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ கோமாவில் இருந்து மீண்டார்.  

20 வயதான இளம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலோ. தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணியில் ஆடியவர் மாண்ட்லி குமாலோ.

தொழில்முறை கிரிக்கெட் வீரராக தனது ஆரம்பக்கட்டத்தில் உள்ள மாண்ட்லி குமாலோ இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டரில் பப் ஓன்றின் வெளியே கடந்த மே 29ம் தேதி கடுமையாக தாக்கப்பட்டார். தனது அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, பிரிட்ஜ்வாட்டரின் பப்பிற்கு வெளியே குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர் கோமாவில் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் ஆடிவரும் குமாலோவின் இந்த நிலை குறித்து அந்த கிரிக்கெட் கிளப் அதிர்ச்சியும் சோகமும் அடைந்து வருத்தம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாண்ட்லி குமாலோ கோமாவில் இருந்து மீண்டுவிட்டதாக நார்த் பீதர்டன் கிளப் அணியில் ஆடிவரும் மாண்ட்லியின் சக வீரரான ஐரிஷ் கூறியுள்ளார். மேலும் அவரது உடல்நிலை இப்போது பரவாயில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!