On this day: ஷேன் வார்ன் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிய தினம் இன்று..! வீடியோ

Published : Jun 04, 2022, 04:58 PM IST
On this day: ஷேன் வார்ன் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிய தினம் இன்று..! வீடியோ

சுருக்கம்

1993ம் ஆண்டு இதே ஜூன் 4ம் தேதி தான், மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசி அசத்தினார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும், ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர்களில் டாப் இருவரில் ஒருவரானவருமானவர் ஷேன் வார்ன். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு(800 விக்கெட்டுகள்) அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் ஷேன் வார்ன்(708).

1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வார்ன், சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ஜெயசூரியா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் திணறடித்தவர்.  ரிஸ்ட் ஸ்பின்னரான ஷேன் வார்ன் வீசியுள்ள சில சுழற்பந்துகள், காலத்தால் அழியாதவை. 

அவர் எத்தனையோ அருமையான பந்துகளை வீசியிருந்தாலும், அவர் அறிமுகமான 1993ம் ஆண்டிலேயே, நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசிவிட்டார். 1993ம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கிற்குத்தான் அந்த பந்தை வீசினார்.

வலது கை பேட்ஸ்மேனான மைக் கேட்டிங்கிற்கு வார்ன் வீசிய பந்து, லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்பை கழட்டி எறிந்தது. ஷேன் வார்னின் இந்த மாயாஜால சுழலில் க்ளீன் போல்டான மைக் கேட்டிங் சிறிது நேரம் களத்தில் நின்று என்ன நடந்தது என்று யோசித்துவிட்டு சென்றார். அதுதான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக பார்க்கப்படுகிறது. அந்த பந்தை வார்ன் வீசிய தினம் இன்று(ஜூன் 4). அண்மையில் ஷேன் வார்ன் மறைந்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!