தென்னாப்பிரிக்க அணியில் 2 சீனியர் நட்சத்திர வீரர்கள் இல்லை.. டேவிட் மில்லருக்கு வாய்ப்பு.. வங்கதேசம் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 2, 2019, 3:09 PM IST
Highlights

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங் ஆடிவருகிறது. 
 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி நடக்கிறது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங் ஆடிவருகிறது. 

தென்னாப்பிரிக்க அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டெய்ன் மற்றும் தொடக்க வீரர் ஹாசிம் ஆம்லா ஆகிய இருவரும் அணியில் இல்லை. ஸ்டெய்ன் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதி பெறவில்லை. எனவே அவர் அணியில் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதால் பாதியில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார் ஆம்லா. அவரும் முழு உடற்தகுதி பெறுவதற்காக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸூம் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். டி காக்குடன் மார்க்ரம் தொடக்க வீரராக இறங்குவார். 

தென்னாப்பிரிக்க அணி:

டி காக்(விக்கெட் கீப்பர்), மார்க்ரம், டுபிளெசிஸ்(கேப்டன்), வாண்டெர் டசன், டுமினி, டேவிட் மில்லர், ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், இங்கிடி, ரபாடா, இம்ரான் தாஹிர்.

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), முகமது மிதுன், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், முகமது சைஃபுதீன், மெஹிடி ஹாசன், மோர்டஸா(கேப்டன்), முஸ்தாஃபிஸுர் ரஹ்மான். 
 

click me!