IND vs SA: வரலாறு படைக்குமா இந்தியா..? 2வது டி20 போட்டி டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 6:52 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 தொடரை வென்றதில்லை. இந்த தொடரில் ஜெயிக்க வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி டி20 தொடர் இதுவென்பதால், இந்த தொடரை வென்று அதே உற்சாகத்துடன் டி20 உலக கோப்பைக்கு செல்ல விரும்பும் இந்திய அணி வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளது.

கவுஹாத்தியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா  ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - பும்ராவிற்கு நிகரான மாற்றுவீரர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்துலயே இல்ல! இந்திய அணிக்கு பேரிழப்பு- ஷேன் வாட்சன்

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.
 

click me!