புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 5:15 PM IST
Highlights

புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாஹர் பன்மடங்கு சிறந்த பவுலர் என்று டேனிஷ் கனேரியா கூறியிருக்கிறார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் அதிக ரன்களை வழங்கிவரும் நிலையில், பும்ராவும் காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஷமியை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த 2 அணிகளில் ஒன்றுதான் வெல்லும்..! ஷேன் வாட்சன் அதிரடி

இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் பேப்பர் அளவில் வலுவாக இருந்தாலும், இப்போதைய சூழலில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் வலுவிழந்ததாகவே தெரிகிறது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஆட புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாஹர் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, ஸ்விங் இல்லையென்றால் புவனேஷ்வர் குமார் அதிக ரன்களை வாரி வழங்கிவிடுவார். ஸ்விங் இல்லையென்றால் அவர் பிரயோஜனமில்லை. குறிப்பாக டெத் ஓவர்களில் அவரது பவுலிங் அடித்து நொறுக்கப்படும். புவனேஷ்வர் குமாரை விட தீபக் சாஹர் மிகச்சிறந்த பவுலர். தேவைப்படும்போது பேட்டிங்கும் ஆடக்கூடியவர் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க - சாலை பாதுகாப்பு டி20 தொடரை வென்றது இந்தியா லெஜண்ட்ஸ்.! சச்சின், பதான் பிரதர்ஸ் கொண்டாட்டம்.. வைரல் வீடியோ

தீபக் சாஹர் டி20 உலக கோப்பைக்கான இந்திய மெயின் அணியில் எடுக்கப்படவில்லை. ஸ்டாண்ட்பை வீரராகத்தான் எடுக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் டெத் ஓவர்களில் அதிகமான ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். இந்நிலையில் தான் டேனிஷ் கனேரியா இந்த கருத்தை கூறியிருக்கிறார்.
 

click me!