டி20 உலக கோப்பையை கண்டிப்பா இந்த 2 அணிகளில் ஒன்றுதான் வெல்லும்..! ஷேன் வாட்சன் அதிரடி

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 4:27 PM IST
Highlights

டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

எனினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதே கருத்தைத்தான் கூறிவருகின்றனர். 

இதையும் படிங்க - பும்ரா ஃபிட்னெஸ் குறித்து ராகுல் டிராவிட் சொன்ன முக்கியமான அப்டேட்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழ்வதுடன், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான அணிகளாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி பெரிய அணிகளையே வீழ்த்திவருகிறது.

தசுன் ஷனாகா தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்த அச்சுறுத்தும் படையாக இலங்கை அணி உருவெடுத்துள்ளது. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல அணிகளுக்கு இடையே போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இதையும் படிங்க- அவர் மனவலிமை வாய்ந்த கிரிக்கெட்டர்..! ஃபார்மில் இல்லாத வீரர் மீது ராகுல் டிராவிட் அபார நம்பிக்கை

இந்நிலையில், டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டி20 தொடரில் அபாரமாக ஆடியிருக்கிறது. எனவே இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம். ஆஸ்திரேலிய அணியும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிவருகிறது. ஆஸ்திரேலிய கண்டிஷன் வித்தியசமாக இருக்கும். மைதானங்கள் பெரிது. பந்தின் வேகமும் அதிகமாக இருக்கும். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று ஷேன் வாட்சன் தெரிவித்தார்.
 

click me!