நமன் ஓஜாவின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 195 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கை லெஜண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
சாலை பாதுகாப்பு டி20 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் இலங்கை அணிகள் ஆடிவருகின்றன. ராய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இதையும் படிங்க - பும்ரா ஃபிட்னெஸ் குறித்து ராகுல் டிராவிட் சொன்ன முக்கியமான அப்டேட்
இந்தியா லெஜண்ட்ஸ் அணி:
நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுஃப் பதான், இர்ஃபான் பதான், ராஜேஷ் பவார், ராகுல் சர்மா, அபிமன்யூ மிதுன், வினய் குமார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்னில் நடையை கட்டினார். 4ம் வரிசையில் இறங்கிய வினய் குமார் 21 பந்தில் 36 ரன்கள் அடித்தார். யுவராஜ் சிங் 13 பந்தில் 19 ரன்கள் அடித்தார்.
இதையும் படிங்க - IND vs SA: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று தொடக்கம் முதலே அடித்து ஆடிய தொடக்க வீரர் நமன் ஓஜா சதமடித்தார். அதிரடியாக ஆடி பவுண்டர்களாக விளாசி சதமடித்த நமன் ஓஜா, 71 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 195 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 196 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.