SA vs IND இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Dec 7, 2021, 2:57 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 22 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான 22 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:

டீன் எல்கர், டெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ககிசோ ரபாடா, சாரெல் எர்வீ, பியூரன் ஹென்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, எய்டன் மார்க்ரம், வியான் மல்டர், அன்ரிக் நோர்க்யா, கீகன் பீட்டர்சன், ராசி வாண்டெர் டசன், கைல் வெரெய்ன், மார்கோ ஜான்சன், க்ளெண்டன் ஸ்டர்மான், பிரெனெலன் சுப்ராயென், சிசாண்டா மகளா, ரியான் ரிக்கெல்டான், டுவான் ஆலிவியர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 

click me!