#RSAvsPAK மார்க்ரம், மாலன் அதிரடி அரைசதம்..! 20 ஓவரில் 203 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா

Published : Apr 14, 2021, 08:08 PM IST
#RSAvsPAK மார்க்ரம், மாலன் அதிரடி அரைசதம்..! 20 ஓவரில் 203 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா

சுருக்கம்

மார்க்ரம் மற்றும் மாலனின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 203 ரன்களை குவித்து, 204 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.  

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், 3வது போட்டி இன்று செஞ்சூரியனில் நடந்துவருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் மற்றும் மாலனின் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

அதிரடியாக ஆடிய மார்க்ரம் 31 பந்தில் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு மார்க்ரமும் மாலனும் இணைந்து 10.4 ஓவரில் 108 ரன்களை குவித்து கொடுத்தனர். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜார்ஜ் லிண்டே அதிரடியாக ஆடி 11 பந்தில் 22 ரன் அடித்து அவுட்டானார். 

அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் மாலனும் அரைசதம் அடித்தார். 40 பந்தில் 55 ரன் அடித்தார் மாலன். வாண்டெர்டசன் 20 பந்தில் 34 ரன் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 204 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!