கேப்டவுனில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில், தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று விளையாடி முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் சிராஜ் 6 விக்கெட்டுகலும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி 153 ரன்கள் குவித்தது.
இதில், அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். இதில், இந்திய அணி 153 ரன்களில் மட்டும் 6 விக்கெட்டுகளை இழந்து வரலாற்றில் இடம் பிடித்தது. பின்னர் தென் ஆப்பிரிக்கா 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் கேப்டன் டீன் எல்கர் 12 ரன்னிலும், டோனி டி ஜோர்ஸி 1 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் தாக்குபிடிக்காத நிலையில், தொடக்க வீரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஓவரில் மட்டும் 20 ரன்கள் குவித்தார். இதில், 2 சிக்ஸர், 2 பவுண்டரி அடங்கும்.
இந்த ஓவரில் மார்க்ரம் அடித்த சிக்ஸரில் பந்து காணாமல் போய்விட்டது. கடைசியாக அவர் 99 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ஆவது சதம் அடித்துள்ளார். முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். முதலில் அரைசதம் அடித்த போது இந்த மைதானத்தில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இந்த கேப்டவுன் மைதானத்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை மார்க்ரம் படைத்துள்ளார். ஆனால், அவர் 73 ரன்களாக இருந்த பும்ரா வீசிய ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். கையில் விழுந்த அழகான கேட்சை கேஎல் ராகுல் கோட்டைவிடவே, மார்க்ரம் இந்தப் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
இறுதியில் மாக்ரம் 103 பந்துகளில் 17 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 106 ரன்கள் குவித்து சிராஜ் வீசிய ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென் ஆப்பிரிக்கா 162 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கூடுதலாக 14 ரன்கள் சேர்த்த நிலையில், தென் ஆப்பிரிக்கா 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இந்திய அணிக்கு 78 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
South Africa vs India 2nd Test: ஒரு ரன்னு கூட எடுக்கல, 6 விக்கெட் காலி – 46 ரன்னுக்கு அவுட்டான கோலி!