#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி

Published : Dec 04, 2020, 09:01 PM IST
#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி

சுருக்கம்

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை(ஆறாம் தேதி)க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்க வேண்டியிருந்தது.

முதல் ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை(4ம் தேதி) கேப்டவுனில் நடக்கவிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த போட்டி ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் போட்டி நடந்தாலும், 2வது போட்டி மறுநாளே திங்கட்கிழமை நடக்கவுள்ளது. கடைசி போட்டி 9ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. அத்துடன் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறது.
 

PREV
click me!

Recommended Stories

ஜூனியர் சச்சின் ரெடி.. வைபவ் சூர்யவன்ஷியை உடனே இந்திய டீம்ல சேருங்க.. வலுக்கும் கோரிக்கை!
ஓபனிங் முதல் பினிஷிங் வரை.. இந்திய அணியில் இடம் பிடிக்க புதிய அவதாரமெடுத்த இஷான் கிஷன்