மேக்ஸ்வெல், ஸ்டார்க்கை களமிறக்கிய ஆஸ்திரேலியா – இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

By Rsiva kumar  |  First Published Nov 16, 2023, 2:09 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.


இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. லீக் போட்டிகள் முடிந்து தற்போது அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து 2ஆவது அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக தப்ரைஸ் ஷம்ஸி அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியா அணியில் தசைப்பிடிப்பால் ஓய்வில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Latest Videos

undefined

தென் ஆப்பிரிக்கா:

குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், கெரால்டு கோட்ஸி, கஜிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி

ஆஸ்திரேலியா:

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மிஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசல்வுட

click me!