டி காக் சதம்; தென்னாப்பிரிக்கா காட்டுத்தனமான பேட்டிங்! டி20-யில் மிகப்பெரிய ரன் சேஸிங்கை செய்து வரலாற்று சாதனை

By karthikeyan VFirst Published Mar 26, 2023, 10:01 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 259 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்று தென்னாப்பிரிக்கா அணி சாதனை படைத்தது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரேமன் ரைஃபர், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், ஷெல்டான் காட்ரெல்.

ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கைல் மேயர்ஸும் 3ம் வரிசையில் இறங்கிய ஜான்சன் சார்லஸும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 135 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் 27 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்க பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்து சதமடித்த ஜான்சன் சார்லஸ் 46 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 118 ரன்களை குவித்தார். ரொமாரியோ ஷெஃபெர்டு 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 20 ஓவரில் 258 ரன்களை குவித்து சாதனை படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 5வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.  

259 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 152 ரன்களை குவித்தனர். காட்டடி அடித்து சதமடித்த குயிண்டன் டி காக் 44 பந்தில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரீஸா ஹென்ரிக்ஸ் 28 பந்தில் 68 ரன்களை குவித்தார். ரைலீ ரூசோ 6 பந்தில் 16 ரன்கள் விளாசினார். டேவிட் மில்லர் 10 பந்தில் 10 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் கேப்டன் மார்க்ரம் அதிரடியாக ஆடி 21 பந்தில் 38 ரன்களையும், ஹென்ரிச் கிளாசன் 7 பந்தில் 16 ரன்களையும் விளாச, 19வது ஓவரில் இலக்கை அடித்து தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

IPL 2023: மிரட்டலான வீரர்களுடன் செம கெத்தா களமிறங்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்! வலுவான ஆடும் லெவன்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக விரட்டி தென்னாப்பிரிக்க அணி சாதனை படைத்தது. இதற்கு முன் 2018ல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 245 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி விரட்டியதே சாதனையாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் அந்த சாதனையை இப்போது தென்னாப்பிரிக்கா முறியடித்துள்ளது.
 

click me!