ஜான்சன் சார்லஸ் சதம்! வெறித்தனமா பேட்டிங் ஆடி டி20-யில் 5வது அதிகபட்ச ஸ்கோரை அடித்து வெஸ்ட் இண்டீஸ் சாதனை

By karthikeyan VFirst Published Mar 26, 2023, 7:37 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஜான்சன் சார்லஸின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 258 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 259 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி. 

ஒரே இன்னிங்ஸில் அந்த பையன் என் கெரியரை முடிச்சு வச்சுட்டான் - ஷிகர் தவான்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரேமன் ரைஃபர், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், ஷெல்டான் காட்ரெல்.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான கைல் மேயர்ஸும் 3ம் வரிசையில் இறங்கிய ஜான்சன் சார்லஸும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 135 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் 27 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்க பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்து சதமடித்த ஜான்சன் சார்லஸ் 46 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 118 ரன்களை குவித்தார். ரொமாரியோ ஷெஃபெர்டு 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 20 ஓவரில் 258 ரன்களை குவித்து சாதனை படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

IPL 2023: மிரட்டலான வீரர்களுடன் செம கெத்தா களமிறங்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்! வலுவான ஆடும் லெவன்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 5வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஃப்கானிஸ்தான் (278), ஆஸ்திரேலியா(263), இலங்கை (260), இந்தியா (260) ஆகிய 4 அணிகளும் டாப் 4 இடங்களில் உள்ளன. இந்த அணிகளுக்கு அடுத்து 5ம் இடத்தை பிடித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. மேலும் இந்த போட்டியில் 22 சிக்ஸர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சர்வதேச டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்தது.

click me!