#WIvsRSA கடைசி டி20யில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது

Published : Jul 04, 2021, 04:14 PM IST
#WIvsRSA கடைசி டி20யில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.  

தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்க அணி 2-0 என வென்ற நிலையில், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா வெற்றிகளை பெற்றதையடுத்து தொடர் 2-2 சமனில் இருந்தது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்கும் 3ம் வரிசையில் இறங்கிய மார்க்ரமும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர்.

2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 128 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த டி காக் 60 ரன்னிலும், மார்க்ரம் 70 ரன்னிலும் ஆட்டமிழக்க, 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 168 ரன்கள் அடித்தது.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லெவிஸ் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 3-2 என தொடரை வென்றது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!
IND VS NZ T20: அதிரடியில் ரஸலையே ஓரம் கட்டிய 'சிக்சர் மன்னன்' அபிஷேக் ஷர்மா.. வரலாற்று சாதனை!