ஓடிஐ, டி20 தொடர்..! கம்பேக் கொடுக்கும் யார்க்கர் மன்னன்! தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

Published : Nov 21, 2025, 10:00 PM IST
Temba Bavuma

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஐ அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இரு அணிகளும் மோதுகின்றன. ஓடிஐ தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும். டி20 போட்டிகள் டிசம்பர் 9 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

ஓடிஐ மற்றும் டி20 அணி அறிவிப்பு

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஓடிஐ மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஓடிஐ தொடருக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுளார். டி20 தொடருக்கு எய்டன் மார்க்கடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, விலா எலும்பு காயம் காரணமாக ஓடிஐ மற்றும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

'யார்க்கர் மன்னன்' அன்ரிச் நோர்க்யா கம்பேக்

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 'யார்க்கர் மன்னன்' அன்ரிச் நோர்க்யா, டி20 தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 32 வயதான இவர், கடைசியாக ஜூன் 2024-ல் பார்படாஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடினார். நீண்ட காலத்துக்கு பிறகு அவர் கம்பேக் கொடுக்க உள்ளார். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான நார்த் வெஸ்ட் பேட்டர் ரூபின் ஹெர்மன், 50 ஓவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஓடிஐ அணி

இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க ஓடிஐ அணி: டெம்பா பவுமா (கேப்டன்) பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், நாண்ட்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி சோர்சி, ரூபின் ஹெர்மன், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், எய்டன் மார்க்ரம், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன் மற்றும் ப்ரெனெலன் சுப்ராயன்

தென்னாப்பிரிக்க டி20 அணி

இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்க டி20 அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், குயின்டன் டி காக், டோனி டி சோர்சி, டோனோவன் ஃபெரேரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாக்கா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்க்யா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!