திரும்பி வந்ததுமே கோலியை காலி செய்த ஸ்மித்.. சச்சின், கோலி சாதனையை பஸ்பமாக்கிய தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Aug 2, 2019, 11:00 AM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். 

ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களில் விராட் கோலி தான் நம்பரின் அடிப்படையில் மற்ற வீரர்களை காட்டிலும் டாப்பில் இருக்கிறார். 

கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார் விராட் கோலி. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து ஐபிஎல் மற்றும் உலக கோப்பையில் ஆடிய ஸ்மித், டெஸ்ட் போட்டியில் நேற்றுதான் களமிறங்கினர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஸ்மித், 122 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணியை சதமடித்து சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 

144 ரன்களை குவித்த ஸ்மித், ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்த சதம் ஸ்மித்துக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 24வது சதம். 118 இன்னிங்ஸ்களில் 24 சதங்களை விளாசிய ஸ்மித், ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 சதங்களை விரைவில் எட்டிய வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு(66 இன்னிங்ஸ்) அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்தார் ஸ்மித். சச்சின் டெண்டுல்கர் 24 சதங்கள் என்ற மைல்கல்லை 125 இன்னிங்ஸ்களிலும் கோலி 123 இன்னிங்ஸ்களிலும் எட்டியிருந்தனர். டான் பிராட்மேனுக்கு இரண்டாவது இடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ஸ்மித். 
 

click me!