இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள பெரிய தலைகள்

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 5:02 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. 

இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. கடந்த ஜூலை 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி நேரடியாக நேர்காணல் செய்யப்படுவார். கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு இம்மாத மத்தியில் நேர்காணலை நடத்தவுள்ளது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் குவிந்திருந்தாலும், விண்ணப்பித்தவர்களில் முக்கியமான சிலர் உள்ளனர். அவர்களுக்கு இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும். இலங்கை அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டாம் மூடி விண்ணப்பித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு அந்த அணியை மேலும் வலுவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரரான மைக் ஹெசனும் விண்ணப்பித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவனுமான மஹேலா ஜெயவர்தனேவும் விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங்கும் இந்த போட்டியில் உள்ளார். 

எத்தனை பேர் விண்ணப்பித்திருந்தாலும், ரவி சாஸ்திரி, ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோருக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவும் என்பது உறுதியாகிவிட்டது.
 

click me!