கவாஜாவும் காலி.. ஆஸ்திரேலிய அணியை அலறவிடும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள்

By karthikeyan VFirst Published Aug 1, 2019, 4:59 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது ஆஸ்திரேலிய அணி. 
 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது ஆஸ்திரேலிய அணி. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி இதுதான். அடுத்த 2 ஆண்டுகளுக்கு நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தான். அந்த வகையில் அதன் முதல் போட்டியே இதுதான். 

பர்மிங்காமில் நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. தடை முடிந்து மீண்டும் அணிக்கு திரும்பிய வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகிய இருவரையும் ஆரம்பத்திலேயே தட்டி தூக்கினார் ஸ்டூவர்ட் பிராட். இன்னிங்ஸின் நான்காவது ஓவரிலேயே வார்னரை வெறும் 2 ரன்களில் வெளியேற்றிய பிராட், 8வது ஓவரில் பான்கிராஃப்ட்டை வீழ்த்தினார். 

ஆஸ்திரேலிய அணி 17 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உஸ்மான் கவாஜாவும் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து ஆடினர். இருவரும் மிக கவனத்துடன் ஆடினர். ஆனால் உஸ்மான் கவாஜாவால் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. கிறிஸ் வோக்ஸின் பந்தில் 13 ரன்களில் நடையை கட்டினார். 

35 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி வார்னர், பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதையடுத்து ஸ்மித்துடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்துள்ளார். முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையே வரவில்லை. அதற்குள் 15 ஓவருக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஆஸ்திரேலிய அணி. ஸ்மித்தும் டிராவிஸ் ஹெட்டும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 

click me!