ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சீகம் மதுரை பாந்தர்ஸ்? டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

By Rsiva kumar  |  First Published Jun 24, 2023, 7:35 PM IST

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. சேலத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

10 பவுண்டரி, 5 சிக்ஸர் – சதம் அடித்த கேப்டன் அருண் கார்த்திக்: நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!

Tap to resize

Latest Videos

இதற்கு முன்னதாக நடந்த போட்டிகளில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.

நடராஜனுக்கு கையில் காயம்: கிரிக்கெட் மைதானம் திறந்த போது எதிர்பாராமல் நடந்த விபரீதம்!

சேலம் ஸ்பார்டன்ஸ்:

எஸ் அபிஷேக், அபிஷேக் தன்வார் (கேப்டன்), ஆகாஷ் சும்ரா, அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஜே கௌரி சங்கர், ராஜேந்திரன் கார்த்திகேயன், கௌசிக் காந்தி, மான் பாஃப்னா, சச்சின் ரதி, சன்னி சந்து, முகமது அத்னான் கான்

சீகம் மதுரை பாந்தர்ஸ்:

எஸ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹரி நிசாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், ஸ்வப்னில் சிங், கே தீபன் லிங்கேஷ், முருகன் அஸ்வின், சுரேஷ் லோகேஷ்வர், வாஷிங்டன் சுந்தர், பி சரவணன், குர்ஜாப்னீத் சிங், வி கௌதம்

பாபா அபராஜித்தின் அதிரடியால் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 159 ரன்கள் குவிப்பு!

click me!