Shubman Gill, Most ODI Runs in 2023: ஓடிஐயில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில் முதலிடம்!

By Rsiva kumar  |  First Published Dec 24, 2023, 10:46 PM IST

2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.


நடப்பு ஆண்டு முடிவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டோம். 2024 ஆம் ஆண்டும் பிறக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு யாருக்கெல்லாம் சிறப்பானதாக இருந்திருக்கிறது என்று பார்த்தால் ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் அது சுப்மன் கில்லிற்கு தான். பவுலிங் என்று பார்த்தால் அது உலகக் கோப்பையை வைத்து முகமது ஷமி தான்.

SKY Video:காயங்கள் ஒரு போதும் வேடிக்கையாக இருக்காது: வாக்கிங் ஸ்டிக் ஊன்றி நடந்து செல்லும் SKY – வைரல் வீடியோ!

Tap to resize

Latest Videos

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் உடன் இந்தியா விளையாடிய 10 லீக் போட்டிகள் உள்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் தான் இந்த ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்திய அணியின் இளவரசர் என்று சொல்லப்படும் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!

இவர் விளையாடிய 29 ஒருநாள் போட்டிகளில் 1584 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதம், 9 அரைசதங்கள் அடங்கும். விராட் கோலி விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில், 6 சதம், 8 அரைசதம் அடங்கும். உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 765 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

முதலில் நீதி கிடைக்க வேண்டும், அதன் பிறகு பத்மஸ்ரீ விருது பற்றி யோசிப்பேன் – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா!

ரோகித் சர்மா 26 போட்டிகளில் விளையாடி 1255 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டில் மட்டுமே ரோகித் சர்மா 67 சிக்ஸர்களும், 131 பவுண்டரிகளும் விளையாசியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ரோகித் சர்மா 323 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அவர் விளையாடிய 25 இன்னிங்ஸ்களில் 1204 ரன்கள் குவித்துள்ளார்.

கடைசியாக 5ஆவது இடத்தில் பதும் நிசாங்கா இடம் பெற்றுள்ளார். அவர் விளையாடிய 29 ஒருநாள் போட்டிகளில் 2 சதம், 9 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 1151 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WFI, Bajrang Punia: பத்மஸ்ரீ விருதை திரும்ப தருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா!

click me!