வருண் ஆரோனின் மிரட்டலான ஸ்விங்கில் கிளீன் போல்டான கில்!! செம வீடியோ

By karthikeyan VFirst Published Apr 26, 2019, 12:10 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. 
 

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. 

எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. தொடர் தோல்விகளால் கேகேஆர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட நழுவவிட்டது. 

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட கேகேஆர் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ராஜஸ்தானிடமும் தோற்று தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிய, மறுமுனையில் நிலைத்து ஆடிய தினேஷ் கார்த்திக், டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்ததோடு ஐபிஎல்லில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். 97 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் தினேஷ் கார்த்திக்.

கேகேஆர் அணி நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை ரஹானே - சாம்சனின் அதிரடியான தொடக்கம் மற்றும் ரியான் பராக் - ஆர்ச்சரின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அதிரடியான பேட்டிங் ஆர்டரை கொண்ட கேகேஆர் அணியை, ஈடன் கார்டன் ஆடுகளத்தின் சராசரி ஸ்கோரை விட குறைந்த ஸ்கோருக்கே சுருட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த போட்டியில் ராஜஸ்தான் பவுலர் வருண் ஆரோன் அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

கேகேஆர் அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில்லை 14 ரன்களில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் வருண். 5வது ஓவரிலேயே அபாரமான இன் ஸ்விங்கில் கில்லை கிளீன் போல்டாக்கினார் வருண். அபாரமான அந்த பந்தின் வீடியோ இதோ.. 

click me!