IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

By karthikeyan V  |  First Published Mar 11, 2023, 6:01 PM IST

அகமதாபாத்தில் நடந்துவரும்  கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்த நிலையில், 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்துள்ளது.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

Tap to resize

Latest Videos

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்,  கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜா (180) மற்றும் கேமரூன் க்ர்ன் (114) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி. அபாரமாக பந்துவீசிய அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 35 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா  சிறப்பாக பேட்டிங் ஆட, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 113 ரன்களை சேர்த்தனர்.

இதுக்கு ஏன்டா ரிவியூ எடுத்தீங்க? கலகலனு சிரித்த அம்பயர்; வைரல் வீடியோ! 3வது அம்பயரை கலாய்த்த தினேஷ் கார்த்திக்

புஜாரா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை விளாசி, ஒரே ஆண்டில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மட்டிலும்  சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன்பின்னர் விராட் கோலியும் ஜடேஜாவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி அரைசதம் அடித்து 59 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 3ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் அடித்துள்ளது.
 

click me!