IND vs AUS: ஏமாத்திய ரோகித் சர்மா, அரைசதம் அடித்து விளையாடி வரும் சுப்மன் கில் - இந்தியா நிதான ஆட்டம்!

Published : Mar 11, 2023, 12:11 PM IST
IND vs AUS: ஏமாத்திய ரோகித் சர்மா, அரைசதம் அடித்து விளையாடி வரும் சுப்மன் கில் - இந்தியா நிதான ஆட்டம்!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோர் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.

கோலி 7 வருசத்துல செஞ்சத ரோகித் சர்மா ஒரே நாள்ல செஞ்சிட்டாரு!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். நேதன் லயன் ஓவரில் சுப்மன் கில் அடித்த சிக்சரால் பந்தை சிறிது நேரம் காணவில்லை. வேறு வழியில்லாமல் வேறு பந்து கொண்டு வரப்பட்ட நிலையில், ரசிகர் ஒருவர் பந்தை தேடிப்பிடித்து எடுத்தார். அவர் பந்தை தேடிக் கொண்டிருந்த போது, கோபமடைந்த ரோகித் சர்மா பந்தை இங்கு தேடு என்று ரசிகரிடம் கூறியுள்ளார். ஒரு வழியாக பந்தை தேடிப் பிடித்த ரசிகர் மகிழ்ச்சியை கொண்டாட ரோகித் சர்மா, கில் உள்பட கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனடையாளர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பவுண்டரி அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ரோகித் சர்மா!

2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தது. இதில், ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் ஓவரில் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்த சாதனயாளர்களின் பட்டியலில் 7ஆவது இடம் பிடித்தார்.

விக்கெட்டே விழ கூடாது; ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்பேத்த வேண்டும் - அஜித் அகர்கர் அறிவுரை!

இறுதியாக எளிதாக சிக்சர் அடிக்க வேண்டிய பந்தில் குன்னெமன் ஓவரில் மார்னஸ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விரக்தியாக வெளியேறினார். அவர் 58 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதுவரையில் ஸ்டார்க் வீசிய 123 பந்துகளில் சுப்மன் கில் 123 ரன்கள் குவித்துள்ளார். இதில், 2 சிக்சர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும். இறுதியாக 3ஆம் நாள் உணவு வேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இதில், சுப்மன் கில் 65 ரன்களுடனும், புஜாரா 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

கவாஜா மீது பந்தை எறிந்த கேஎஸ் பரத்: டேய் சும்மா இருடா என்று திட்டிய விராட் கோலி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி