PSL 2023: ரைலீ ரூசோ காட்டடி சதம்; முல்தான் அணி அபார வெற்றி! 240+ ரன்கள் அடித்து 2வது முறையாக தோற்ற பெஷாவர் அணி

Published : Mar 11, 2023, 03:54 PM ISTUpdated : Mar 11, 2023, 03:59 PM IST
PSL 2023: ரைலீ ரூசோ காட்டடி சதம்; முல்தான் அணி அபார வெற்றி! 240+ ரன்கள் அடித்து 2வது முறையாக தோற்ற பெஷாவர் அணி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ரைலீ ரூசோவின் காட்டடி சதத்தால் 243 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் முதல் பந்தில் அடித்து முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 240+ ரன்கள் அடித்தும் கூட 2வது முறையாக பெஷாவர் ஸால்மி அணி தோல்வியடைந்தது அந்த அணிக்கே பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராவல்பிண்டியில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெஷாவர் ஸால்மி அணி:

சயிம் அயுப், பாபர் அசாம் (கேப்டன்), ரோவ்மன் பவல், டாம் கோலர் காட்மோர், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், முஜீபுர் ரஹ்மான், அர்ஷத் இக்பால்.

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ரைலீ ரூசோ, டிம் டேவிட், குஷ்தில் ஷா, கைரன் பொல்லார்டு, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஷெல்டான் காட்ரெல், ஈசானுல்லா.

IND vs AUS: டெஸ்ட்டில் 2வது சதம் விளாசினார் ஷுப்மன் கில்..! சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் கில் அபார சாதனை

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் சயிம் அயுப் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 134 ரன்களை குவித்தனர். சயிம் அயுப் 33 பந்தில் 58 ரன்கள் அடித்தார். காட்டடி அடித்த பாபர் அசாம் 39 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்தார்.11 பந்தில் 4 சிக்ஸர்களுடன் முகமது ஹாரிஸ் 35 ரன்களை விளாச, டாம் கோலர் காட்மோர் 18 பந்தில் 38 ரன்கள் விளாச 20 ஓவரில் 242 ரன்களை குவித்தது பெஷாவர் ஸால்மி அணி.

243 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத் (5) மற்றும் முகமது ரிஸ்வான்(7) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 3ம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூசோ களமிறங்கியது முதல் காட்டடி அடித்தார். பெஷாவர் ஸால்மி பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்த ரைலீ ரூசோ சதமடித்தார். 51 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 121 ரன்களை குவித்தார். கைரன் பொல்லார்டு அதிரடியாக ஆடி 25 பந்தில் 52 ரன்கள் அடிக்க, பின்வரிசையில் அன்வர் அலி 8 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார். 19.1 ஓவரில் 243 ரன்கள் என்ற கடின இலக்கை அடித்து முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து முரளிதரனை விரட்டும் அஷ்வின்

பெஷாவர் ஸால்மி அணி இதற்கு முந்தைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிராகவும் 240 ரன்கள் அடித்தும் கூட, குவெட்டா அணி வீரர் ஜேசன் ராயின் காட்டடி சதத்தால் தோல்வியை தழுவியது. இந்நிலையில், 242 ரன்களை குவித்தும் கூட, மீண்டும் தோல்வியை தழுவியிருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு