எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க.. சும்மா தெறிக்கவிடுறேன்.. இந்திய அணியிடம் அப்ளிகேஷன் போட்ட இளம் வீரர்

By karthikeyan VFirst Published Jul 18, 2019, 3:35 PM IST
Highlights

இந்திய அணியின் நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதற்கான இடம் ஓபனாகவே உள்ள நிலையில், இளம் வீரர் ஒருவர் இந்திய அணி நிர்வாகத்திடமும் தேர்வுக்குழுவிடமும் அப்ளிகேஷன் போட்டுள்ளார்.  
 

இந்திய அணியின் நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதற்கான இடம் ஓபனாகவே உள்ளது. 

உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்திய அணியின் பெரிய பலவீனமாக இருந்த மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் 4ம் வரிசையை பூர்த்தி செய்ய பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான் அந்த இடத்தில் உறுதி செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர், நான்காம் வரிசை வீரர் கண்டறியப்பட்டுவிட்டதாக ராயுடுவை குறிப்பிட்டு கேப்டன் கோலி தெரிவித்தார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் வரை ராயுடு அணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இடம்பெற்றிருந்தும் கூட, 2 வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், ராயுடு அழைக்கப்படவில்லை. தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் விஜய் சங்கருக்கு பதில் மயன்க் அகர்வாலும் அணியில் இணைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ராயுடு. 

இந்திய அணியின் பெரிய பிரச்னையாகவும் பலவீனமாகவும் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல், உலக கோப்பையிலும் தொடர்ந்தது. அதன் எதிரொலி தான் இந்திய அணியின் தோல்வி. மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்பதை எதிரணிகளுக்கு வெளிப்படையாக தெரியும் அளவிற்கு பலவீனமாக இருந்தது. 

இந்திய அணி அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியதை அடுத்து, இந்திய அணி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக செய்த பரிசோதனை முயற்சிகள் குறித்த கேள்விகளையும் இந்திய அணி தேர்வு குறித்த கேள்விகள் மற்றும் அதிருப்தி, ஆதங்கங்களை முன்னாள் வீரர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். 

உலக கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் ராகுல் நான்காம் வரிசை வீரராக களமிறங்கினார். தவான் காயத்தால் விலகியதால் ராகுல் தொடக்க வீரராக இறக்கப்பட்டதால் நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறங்கினார். அதன்பின்னர் அவரும் காயத்தால் விலகியதால் நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். இவர்கள் அனைவருமே ஓரளவிற்கு அந்த வரிசையில் பங்களிப்பு செய்தாலும் சிறப்பாக ஆடவில்லை என்பதுதான் உண்மை. உலக கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியதை அடுத்து இந்திய அணியின் நான்காம் வரிசை மற்றும் மிடில் ஆர்டர் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், இந்திய அணியின் நான்காம் வரிசை வீரருக்கான வாய்ப்பு இன்னும் ஓபனாகவே உள்ளது. இந்திய அணியின் நிரந்தர நான்காம் வரிசை வீரரை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் அணி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதற்காக தனது விருப்பத்தை ஓபனாகவே தெரிவித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இணைய அப்ளிகேஷன் போட்டுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். 

இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய அணியில் ஆடுவதற்கு உடலளவிலும் மனதளவிலும் தயாராக இருக்கிறேன். இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது எனது ஆட்டம் அணியை சரிவிலிருந்து மீட்க உதவும் என உறுதியாக நம்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக ஆடி எனது திறமையை நிரூபிப்பேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

click me!