ரொம்ப காலமாவே இது பெரிய பிரச்னையா இருக்கு.. இப்படிலாம் இருந்தா டீம் எப்படி வெளங்கும்? சீனியர் வீரர்களை தெறிக்கவிட்ட முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Jul 18, 2019, 3:18 PM IST
Highlights

உலக கோப்பையின் முதற்பாதியில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் வெகுண்டெழுந்து 4 தொடர் வெற்றிகளை குவித்தது. ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. 
 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பையின் முதற்பாதியில் சொதப்பிய பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் வெகுண்டெழுந்து 4 தொடர் வெற்றிகளை குவித்தது. ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். சீனியர் வீரர்கள் விஷயத்தில் பாகிஸ்தன அணி நிர்வாகம் சமரசம் செய்துகொள்வது அணியின் நலனை பாதிக்கிறது. சீனியர் வீரர்கள் சரியான நேரத்தில் மரியாதையுடன் ஓய்வுபெறுவது நல்லது என்று யாருமே சொல்வதில்லை. அவர்கள் முழு உடற்தகுதியுடன் இல்லையென்றாலும், சீனியர் வீரர்கள் என்பதற்காக அணி நிர்வாகம் சமரசம் செய்துகொண்டு அவர்களை அணியில் சேர்த்துகொண்டு ஆடவைக்கிறது. கடைசி நேரத்தில் சீனியர் வீரர்களை திடீரென அணியில் இணைப்பது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டிருக்கிறது என்று வக்கார் யூனிஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

20 ஆண்டு காலம் பாகிஸ்தான் அணியில் ஆடிய ஷோயப் மாலிக், சரியாக ஆடாத போதிலும் உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து டக் அவுட்டான பிறகுதான் அவர் நீக்கப்பட்டு சொஹைல் அணியில் சேர்க்கப்பட்டார். சொஹைலும் சிறப்பாக ஆடினார், பாகிஸ்தான் அணியும் வெற்றிகளை குவித்தது. 

அதேபோல் முகமது ஹஃபீஸும் இன்னும் ஆடிவருகிறார். இவர்களை குறிப்பிட்டுத்தான் வக்கார் யூனிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை நெருங்கிய நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஜுனைத் கான், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் நீக்கப்பட்டு சீனியர் வீரர்கள் வஹாப் ரியாஸ் மற்றும் முகமது ஆமீர் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாம் சுட்டிக்காட்டித்தான் வக்கார் யூனிஸ் குற்றம்சாட்டியுள்ளார். 
 

click me!