ஐபிஎல் 2024 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் 3ஆவது முறையாக சாம்பியனானதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தொடரின் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 2024 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ஷ்ரேயாஸ் ஐயர் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடினார். அதோடு, 3ஆவது முறையாக அணிக்கு டிராபியை வென்று கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் முதல் முறையாக சாம்பியனானது. இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் அடுத்தடுத்த போட்ட்களில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2024-25 ஆம் ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று தெரிகிறது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து ஜூலை மாதம் இந்திய அணியானது ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ஜிம்பாப்வே தேர்வில் இருக்கும் வீரர்களே அதிகம். அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி, விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முகாமில் உள்ள அனைவரும் ஜிம்பாப்வே டி20 போட்டியில் இடம் பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் தலைமை பயிற்சியாளராக தனது பணியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.