இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் விசாகப்படினம் மைதானத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது.
இதைத் தொடர்ந்து 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் வரும் 12 ஆம் தேதி ராஜ்கோட் புறப்பட்டுச் செல்கின்றனர். முதல் 2 போட்டிகளுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். எஞ்சிய போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்ட சிஎஸ்கேயின் நியூ ஜெர்சி வெளியீடு; வைரலாகும் ஜெர்சி நம்பர் 7 வீடியோ!
ஆனால், அதற்குள்ளாக ஒவ்வொரு வீரரும் காயம் மற்றும் வலி காரணமாக வெளியேறி வருகின்றனர். ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் விராட் கோலி இடம் பெறவில்லை. 2ஆவது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயம் காரணமாக விலகினர். இவர்களுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், 3ஆவது, 4ஆவது மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு ஏற்கனவே முதுகு வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தற்போது மீண்டும் வலியை ஏற்படுத்தவே எஞ்சிய 3 டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் 2024 – இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!