மும்பை அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டன்

By karthikeyan VFirst Published Sep 18, 2019, 10:20 AM IST
Highlights

இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு தேடிக்கொடுத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், மும்பை அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஹைதராபாத், ஆந்திரா, குஜராத், சவுராஷ்டிரா, பெங்கால், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேகாலயா, விதர்பா ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 24 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடி 2 அரைசதங்களை அடித்து இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்ல காரணமாக இருந்தார். இந்திய அணியின் நீண்டகால சிக்கலாக இருந்துவந்த நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்துள்ளார். 

ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் சிறப்பாக ஆடியதால்தான் இந்திய அணியில் இடம்பிடித்தார். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்திருந்தாலும் கூட, விஜய் ஹசாரே தொடரிலும் அவர் அபாரமாக ஆடி தனது திறமையை மீண்டும் நிரூபித்து, இந்திய அணியில் தனது இடத்தை மேலும் வலுவாக்கவே முயல்வார். 

கடந்த விஜய் ஹசாரே தொடரில் ஆடாத சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணியில் இணைந்துள்ளார். துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஷர்துல் தாக்கூர், ஆதித்ய தரே, தவால் குல்கர்னி ஆகியோர் மும்பை அணியில் உள்ளனர். 

விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணி:

ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), சூர்யகுமார் யாதவ்(துணை கேப்டன்), ஜாய் பிஸ்டா, ஆதித்ய தரே, சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஷுபம் ரஞ்ஜனே, ஏக்நாத் கேர்கார், தவால் குல்கர்னி, துஷார் தேஷ்பாண்டே, ஷாம்ஸ் முலானி, அதர்வா அன்கோல்கர், ஷர்துல் தாகூர், சித்தேஷ் லத், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், க்ருத்திக் ஹனகவாடி, ஷேஷான்க் அட்டார்டே.
 

click me!