நான் ஒரு இந்து என்பதால் சில பாகிஸ்தான் வீரர்கள் என் கூட பேசவே மாட்டாங்க.. அக்தர் கொடுத்த தைரியத்தால் கொடுமைகளை புட்டுப்புட்டு வைத்த டேனிஷ் கனேரியா

By karthikeyan VFirst Published Dec 27, 2019, 10:19 AM IST
Highlights

பாகிஸ்தான் அணியில் ஆடிய இந்து வீரரான டேனிஷ் கனேரியாவை சில சக வீரர்கள், அவர் ஒரு இந்து என்பதற்காக அவரை ஒதுக்கியதாக ஷோயப் அக்தர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 
 

அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவுடன் ஆடிய அவரது சக வீரருமான ஷோயப் அக்தர், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்தர், எனது கெரியரில், பிராந்திய ரீதியான பிரிவினையை தூண்டும் விதமாக பேசும் 2-3 வீரர்களுடன் சண்டை போட்டிருக்கிறேன். கராச்சி, பஞ்சாப், பெஷாவர் என, அணிக்குள் பிராந்திய ரீதியான பாகுபாட்டை திணித்து சீற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவார்கள். அவர்களுடன் நான் சண்டை போட்டிருக்கிறேன். ஒருவர் இந்து மதத்தை சேர்ந்த வீரராக இருந்தால், அதனால் என்ன..? அவர் சிறப்பாக ஆடி அணிக்காக நல்ல பங்களிப்பு செய்வதுதான் முக்கியம். 

Also Read - இவங்க 2 பேரும் இதனால்தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்காங்க.. வியக்கவைக்கும் ஸ்கோர்கார்டு.. அரிதினும் அரிதான சம்பவம்

ஆனால் அவரை இந்து என்பதற்காக சில வீரர்கள் ஒதுக்கினர். டேபிளில் இருந்து நீ எப்படி சாப்பாட்டை எடுக்கலாம்? என்று கேட்பார்கள். அவருடன் இணைந்து சாப்பிடக்கூட மாட்டார்கள். ஆனால், இதே இந்து வீரர் தான் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை வாரிக்குவித்தார். அவரது அபாரமான பவுலிங்கால்தான் பாகிஸ்தான் அணி தொடரையே வென்றது. கனேரியா இல்லாமல் அந்த தொடரை வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான கிரெடிட்டை கூட அவருக்கு சக வீரர்கள் கொடுக்கவில்லை என்று உண்மையை உரக்க சொன்னார் அக்தர். 

Also Read - ஓய்வறைக்குள் நுழைந்த தேர்வாளரை ஓட ஓட விரட்டிய மனோஜ் திவாரி.. ரஞ்சி போட்டியில் பரபரப்பு சம்பவம்

இதுபோன்ற ஒடுக்குமுறைக்கு ஆளானாலும், அதுகுறித்தெல்லாம் பேசாமல் இருந்த கனேரியா, அக்தரின் வெளிப்படையான பேச்சால், தைரியமடைந்து, தனக்கு நேர்ந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார். இதுகுறித்து பேசிய கனேரியா, ஷோயப் அக்தர் ஒரு லெஜண்ட். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றுமே உண்மை. நான் ஆடிய காலத்தில் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு எனக்கு தைரியமில்லை. ஆனால் அக்தர் பேசியதால், நானும் பேசுகிறேன். அக்தர் எப்போதுமே எனக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். அதேபோல இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய வீரர்களும் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். நான் இந்து என்பதால் என்னிடம் சரியாக பழகாமல், ஒதுக்கிவைத்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கனேரியா தெரிவித்தார். 

click me!