IPL 2023: ஐபிஎல்லில் அபாரமான சாதனை.. வார்னர், கோலி பட்டியலில் இணைந்தார் ஷிகர் தவான்

By karthikeyan V  |  First Published May 9, 2023, 5:38 PM IST

ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. எஞ்சிய 2 இடங்களுக்கு மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்ந்துவருகின்றன. அதேபோல ஐபிஎல்லில் சில வீரர்களும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர். 

Latest Videos

IPL 2023: ரசல் மாதிரி ஃபினிஷரை சிங்கிளுக்கு கூப்புடுறான்.! செம தில்லுக்காரன் இந்த ரிங்கு சிங்.. கைஃப் புகழாரம்

தோனி, கோலி, ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், ஃபாஃப் டுப்ளெசிஸ், ஷேன் வாட்சன், ஷிகர் தவான், டேவிட் வார்னர் உள்ளிட்ட பல வீரர்கள் ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களாக திகழ்கின்றனர்.

ஐபிஎல்லில் பல சாதனைகள் படைக்கப்பட்டுவரும் நிலையில், ஷிகர் தவான் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 57 ரன்கள் அடித்தார். இது ஷிகர் தவானின் 50வது அரைசதம் ஆகும். 

ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு

இதன்மூலம் ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர்(59) மற்றும் விராட் கோலி(50) ஆகிய இருவரும் 50 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் 3வது வீரராக ஷிகர் தவானும் இணைந்துள்ளார்.

click me!