#SLvsIND ஆரம்பத்துலயே அவுட்டான ஷிகர் தவான்..! அதுலயும் ஒரு நல்லது இருக்கு

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 3:49 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷிகர் தவான் வெறும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, இன்று நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வென்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால், முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம், ஃபாஸ்ட் பவுலர் சேத்தன் சக்காரியா ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.

இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சக்காரியா.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 13 ரன்னில் சமீராவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்டதையடுத்து, பிரித்வி ஷாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்துள்ளார். சஞ்சு சாம்சனுக்கு விரைவில் களத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே பெரிய இன்னிங்ஸ் ஆட இது அருமையான வாய்ப்பு.

மேலும், சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா ஆகிய வீரர்களுக்கு பேட்டிங்கிலும், சேத்தன் சக்காரியா, நவ்தீப் சைனி, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் பவுலிங்கிலும் தங்களை நிரூபிப்பதற்கு அருமையான வாய்ப்பு இது.
 

click me!